background img

புதிய வரவு

பா.ஜனதா தலைவர் கட்கரி சீனா பயணம்


பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி நல்லெண்ண பயணமாக சீனா சென்றுள்ளார். 

ஐந்து நாள் பயணமாக தலைநகர் பீஜிங்கிற்கு நேற்று வந்து சேர்ந்த அவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். 

அப்போது இந்தியா - சீனா இடையேயான பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் விரிவாக பேச்சு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தமது சீன பயணம் குறித்து பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி, சீனாவுடன் நல்லுறவும், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் ஒருமித்த கருத்து நிலவுவதாக கூறினார். 

மேலும் சீன தலைவர்களை சந்திக்க இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கட்கரி, இந்தியாவின் மிகப்பெரிய அண்டை நாடு சீனா என்றும், சுமார் 3,500 கி.மீ. தொலைவிலான எல்லைப் பகுதியை சீனாவுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts