தேர்தல் நெருங்கி வருவதால் இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் , ஆளும் அரசு மீது குற்றம் சுமத்த தயாராக உள்ளது. ஆளும் கட்சியை பொறுத்தவரை தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று சபை கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கண்டனம் தெரிவித்தனர். விலைவாசி உயர்வு , ஸ்பெகட்ரம் விவகாரம், மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஆகியவற்றை வலியுறுத்தி கண்டித்து பேசினர். ஆனால் கவர்னர் இதனை பொருட்படுத்தாமல் தனது உரையை துவக்கினார்.
சபாநாயகர் உத்தரவு : தொடர்ந்து எதிர்கட்சியினர் இடையூறு செய்து கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர். இதனையடுத்து சபாநாயகர் ஆவடையபப்பன் சபை கட்டுப்பாட்டை மீறி செயல்படும் எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து சபைக்காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., மார்க்.,கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., ம.தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நேரத்தில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்.சபை காவலருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்கள் நிருபர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மணல்கொள்ளை, மின்தட்டுப்பாடு, போக்குவரத்து கழகம் முடக்கம், உள்ளிட்ட இந்த நேரத்தில் கவர்னர் உரை தேவையா என சபையில் கேள்வி எழுப்பினோம். ஆனால் சபை காவலர்கள் எங்களை வெளியேற்றி விட்டனர் என்றனர்.
ஆட்சிக்கு கவர்னர் புகழாரம்: தமிழகத்தில் மீனவர்கள் நலன், மாணவர்கள் நலன் பேணிக்காக்கப்படுகிறது. குடிசை வீடுகள் மாற்றி கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ரோடு பணிகள் நல்ல முறையில் நடந்துள்ளது. மருத்துவக்கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட்டு திறம் வாய்ந்த டாக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் ஆவடையப்பன் தமிழில் மொழிபெயர்த்து பேசுவார்.கவர்னர் உரை முடிந்ததும், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சபை எத்தனை நாள் நடத்தலாம், என்ன விவாதங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும். ஒருவார காலம் நடக்கும் இந்த கூட்டத்திற்கு பின்னர் வரும் பிப். 4 ம்தேதி மீண்டும் சபை கூடுகிறது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
0 comments :
Post a Comment