போட்டி குறித்து இந்திய அணியின் கேப் டன் டோனி கூறுகையில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 130 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்த போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அதன் பின்னர் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டோம்.
காலிஸ் அருமையாக ஆடி ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து பறித்துவிட்டார். அவரை மட்டும் அல்லாமல் பின்கள வீரர்களையும் நாங்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். 250 முதல் 260 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஜெயிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். 340 ரன்கள் என்பது கடைசி நாளில் கடினமாக இலக்கு. இந்திய பந்து வீச்சாளர்கள் பழைய பந்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து வெற்றி பெற்றோம். ஒட்டு மொத்ததில் டெஸ்ட் தொடர் எங்களுக்கு சிறப் பாக அமைந்தது.
சேவாக்கின் மோச மான பார்மினால் அணி யின் வாய்ப்புகள் பறி போனதா? என்ற கேள்விக்கு டோனி பதில் அளிக்கையில், எல்லோருமே சிறப்பாக தான் ஆடவேண்டும் என நினைப்பார்கள். சேவாக் சிறப்பாக தான் ஆடினார். ஆனால் எல்லா நேரமும் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்பதற்கு கியாரண்டி கொடுக்க முடியாது என்றார்.
0 comments :
Post a Comment