படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் 2006-2007இல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, இதுவரை 4,01,704 இளைஞர்களுக்கு ரூபாய் 284 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டு 10வது வகுப்பு தேர்ச்சியுறாத, வேலையற்ற இளைஞர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்பதை உணர்ந்து வேலையில்லாத் திண்டாட்டத்தை முழுமையாக அகற்ற பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து அரசுத் துறைகளில் மட்டும் 5,05,314 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பயிற்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தகுதியின் தன்மைக்கும், கல்லூரிகள், பள்ளிகளில் படித்து வெளிவரும் இளைஞர்களின் திறமைக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக உயர்கல்வி படித்த மாணவர்கள் கூடப் படிப்பினை வெற்றிகரமாக முடித்த பின்பு வேலைவாய்ப்பைப் பெற இயலாத நிலையைத் தவிர்த்து ஒரு நிரந்தரத் தீர்வு காண தொழில் நிறுவனங்களே படித்த இளைஞர்களை நேரடியாகத் தேர்வு செய்து பயிற்சி அளித்து,வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒரு புதிய திட்டமாக “படித்த இளைஞர்களுக்கான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு” திட்டம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள், சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், முதற்கட்டமாக திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகைதந்த 49,495 இளைஞர்களில் 17,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான பணி, மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இத்திட்டத்தில் மற்ற மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி எடுத்துள்ளது. அரசு மேற்கொண்டு வரும் பயிற்சியுடன் கூடிய இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடுத்த கட்டமாகப் பள்ளிகள், கல்லூரிகளுடன் தொழில் நிறுவனங்களின் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, அந்தத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் வகையில் மாணவ - மாணவியர்க்குப் பயிற்சிகள் அளித்திடும் கல்வித் திட்டங்களை உரியவாறு மாற்றியமைத்து,மொழியாற்றல் போன்ற கூடுதல் திறன் வளர்ப்புப் பயிற்சியையும் கல்வி நிறுவனங்களிலேயே வழங்கிப் பட்டம் பெற்றவுடன் இளைஞர்கள் பணியில் அமரக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இது தவிர, சமூக ஆர்வலர்களும், தமிழ் மய்யம் போன்ற தனியார் அமைப்புகளும், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்களின் உதவியுடன் நாகர்கோவில், காரியாப்பட்டி, வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பினைத் தேடித் தரும் முகாம்களை நடத்தின.
இந்த முகாம்களில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இத்தகைய முயற்சிகளை இந்த அரசு வரவேற்பதுடன், இந்த அமைப்புகள்
ஆற்றிவரும் அரும்பணிகளையும் பாராட்டுகிறது.
0 comments :
Post a Comment