background img

புதிய வரவு

ஜவ்வரிசி மிக்ஸர்

தேவையானவை:

நைலான் ஜவ்வரிசி - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
உ.கடலை - 100 கிராம்
உருளைக்கிழங்கு சீவல் சிப்ஸ் - 100 கிராம்
கொப்பரைத் தேங்காய் - அரை கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பெங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை எண்ணெயில் நன்றாக பொரித்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

பின்னர் அதில் கறிவேப்பிலை, வேர்க்கடலை, உ.கடலை, உருளைக் கிழங்கு சிப்ஸ் போட்டு வறுக்கவும்.

அதன்பின்னர், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறவும்.

கடைசியில், பொரித்து வைத்துள்ள ஜவ்வரிசியை கொட்டி கிளறி இறக்கவும்.

அவ்வளவுதான் ஜவ்வரிசி மிக்ஸர் தயார். பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts