background img

புதிய வரவு

கருப்புப் பணத்தை மீட்க 5 அம்ச திட்டம்: பிரணாப் முகர்ஜி

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அயல் நாட்டு வங்கிகளின் இரகசிய கணக்குகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணர 5 அம்சத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை வெளியிட்டார்.

அத்திட்டத்தின் 5 அம்சங்கள்: 1. கருப்புப் பணத்திற்கு எதிராக சர்வதேச நடவடிக்கை; 2. கருப்புப் பண விவரங்களை பெற்று வெளியிடுவதற்கான சர்வதேசச் சட்டம்; 3. சட்டத்திற்குப் புறம்பான நிதிகளை கண்காணிக்க தனி அமைப்பு; 4. அதனை நடைமுறைப்படுத்த தனி அமைப்புகள்; 5. கருப்புப் பணத்தை தடுப்பதற்குரிய திறனை மேம்படுத்த தனிப் பயிற்சி ஆகியனவே அந்த 5 அம்சங்கள் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இவைகள் மட்டுமின்றி, தற்போது மத்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு நாடுகளுடன் செய்துகொள்ளும் இரு தரப்பு ஒப்பந்தம். இதன் மூலம் வருமான வரி வசூல் செய்ய சட்ட ரீதியான வழி பிறக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts