background img

புதிய வரவு

பத்ம விருதுகள் அறிவிப்பு: பராசரன், அஜிம் பிரேம்ஜி, அலுவாலியாவிற்கு பத்ம விபூஷண்

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜிம் பிரேம்ஜி, திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா, தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ், தேச பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கு இந்திய அரசின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஷண் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 61வது குடியரசு நாளை முன்னிட்டு இன்று பத்ம விருதுகளைப் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் மிக உயரிய அரசு விருதான பாரத் ரத்னா வழங்கப்படவில்லை.

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழக அரசிற்காக வாதிட்டுவரும் மூத்த வழக்குரைஞர் பராசரன், வரலாற்றாளர் கபில வாத்சயாயன், முதல் பெண் புகைப்பட நிபுணர் ஹோமாய் வியாராவாலா, மலையாள எழுத்தாளர் ஓ.என்.வி.குரூப், ஒரிய மொழியாளர் சீதாகந்த மஹபாத்ரா, மறைந்த காந்தியவாதி எல்.சி.ஜெயின், ஏ.ஆர் கித்வாய், நிதி நிபுணர் விஜய் கேல்கர், அறிவியலாளர் பி.இராமா ராவ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி நடிகர் சஷி கபூர், நடிகை வஹிதா ரஹ்மான், இசையமைப்பாளர் கய்யாம், தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்ற திரைப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், முன்னாள் அயலுறவு செயலர் ஷியாம் சரண், ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அலுவலர் சந்தா கோச்சார் உள்ளிட்ட பலர் பத்ம பூஷண் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்ம ஸ்ரீ விருதிற்கு கிரிக்கெட் வீரர் வெங்கட் சாய் லக்ஷ்மண், பளு தூக்குதலில் பெருமை சேர்த்த குஞ்சராணி தேவி, மல்யுத்த வீரர் சுசீல் குமார், துப்பாக்சிச் சுடுதலில் உலக சாதனை படைத்துள்ள ககன் நரங், வட்டு எறிதலில் காமன்வெல்த் தங்கம் வென்ற கிருஷ்ண பூணியா ஆகிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts