background img

புதிய வரவு

கீரை‌க் கலவை சாதம்

தேவையானவை: 

முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக் கீரை - 2 கப்
பச்சரிசி - 1 கப்
வெங்காயம் - 2 
தக்காளி - 1 
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 6 
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

பச்சரியை சுத்தப்படுத்தி சற்று உதிரிப் பதத்தில் சாதம் வடித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் சாதத்தை பெரிய தட்டில் பரப்பி சிறிது உப்பு தூவி எண்ணெய் பிசறவும். 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தாளிக்கவும். 

இதில் அரிந்த வெங்காயம், அரிந்த கீரைகள் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்னர், அரிந்த தக்காளி, புளி கரைசல், தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள், மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 

நன்கு வதங்கிய பின்னர், அதில் சாதத்தைக் கொட்டிக் கலந்து சில நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைத்து இறக்கவும். 

சத்தான, சுவையான கீரைக் கலவை சாதம் தயார். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts