background img

புதிய வரவு

மனைகள்தோறும் பொங்கலிட்டு மகிழ்ந்திட வேண்டும்-ராமதாஸ் பொங்கல் வாழ்த்துக் கவிதை

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களை, ஒரு கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.

பாரதியார் பாடல் வரிகளின் பாணியில், தமிழ் மக்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள கவிதை :

ஆளுக்கொரு காணி நிலம்
அடைந்திட வேண்டும்.
அதன் நடுவே கேணியொன்று
அமைந்திட வேண்டும்

காளை பூட்டி ஏறுழுது
பயிரிட வேண்டும்
வாழையுடன் நெல்,கரும்பு
விளைந்திட வேண்டும்

வறுமையுடன்
பசிப் பிணியும்
ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை
எனும் நிலை வேண்டும்

மாளிகையாய் குடிசையெலாம்
மலர்ந்திட வேண்டும்
மனைகள்தோறும் பொங்கலிட்டு
மகிழ்ந்திட வேண்டும்

என்று தனது கனவுகள் தமிழ்ப் புத்தாண்டில் நனவாகட்டும் என்றெண்ணி வாழ்த்தியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts