ஜம்மு: காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலையில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது பற்றி நமது ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: போர் ரத்து ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது.
திங்கட்கிழமை அதிகாலையில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கோடு பகுதியில் திடீரென பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். குறைந்த சக்தி துப்பாக்கிகளை பயன்படுத்தியதால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், இந்திய படையினர் எதிர்தாக்குதல் நடத்தவில்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகவே பாகிஸ்தான் ராணுவம்இப்படி திடீர் தாக்கு தல் களை நடத்துகிறது. நமது விழிப்புடன் செயல்படுவதால், ஊடுருவல்களை தடுத்து விடுகிறோம். ஏற்கனவே கடந்த மாதம் 29ம் தேதியன்று, சம்பா மாவட்டத்தில் இந்திய எல்லைக் கட்டுப்பாடு அலுவலகத்தின் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment