background img

புதிய வரவு

இறால் இகுரு


இறால் இகுரு
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி - 1/2 கட்டு
புளி - கோலியளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியபின் இஞ்சி- பூண்டு விழுதைச் சேர்க்கவும்.பின்பு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு நீர் சேர்க்கவும்.இப்போது இறாலைச் சேர்த்து மசாலாவையும் கலக்கவும்.விதை நீக்கிய காய்ந்த மிளகாய் மற்றும் உப்பையும் சேர்த்து வேக விடவும்.
புளிக் கரைசலையும் சேர்த்து இறால் வெந்ததும் இறக்கி விடவும்.
கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts