சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று விடுத்துள்ள அறிக்கை: சபரிமலையில் நடைபெற்ற ஐயப்பன் மகரஜோதியில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பாராத வகையில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் திடுக்கிட வைப்பதாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் பல உயிர்கள் போன பிறகு நீதி விசாரணை நடத்துவதும், காவல்துறை புலனாய்வு மேற்கொள்வதும் மத்திய, மாநில அரசுகள் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி வழங்குவதும் ஓரளவு ஆறுதல் அளிக்குமே தவிர, இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுத் தராது. ஆகவே உயிரிழந்த குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது மாநில அரசுகள் வேலை கொடுக்க வேண்டும்.
ஐயப்பன் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. முன்கூட்டியே வழிகளை அகலப்படுத்தியும், முறையான வேலிகளை அமைத்தும் இருக்கலாம். கோயிலுக்கு செல்வோருக்கு அனுமதி சீட்டு வழங்கி அனுப்பி இருக்கலாம். கேரள அரசும், கோயில் நிர்வாகமும் முன்கூட்டியே மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment