நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டின் உள்பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், பக்கத்து நகரமான கோத்தகிரிக்கு வரவேண்டுமானால், எஸ்டேட் பாதையைத் தான் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், அதற்கு எஸ்டேட் நிர்வாகத்திடம் அனுமதிச் சீட்டு வாங்கினால் தான் அந்த பாதையை பயன்படுத்த முடியும். இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கோடநாடு எஸ்டேட் பாதையை பயன்படுத்த கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் விதித்திருந்த தடையை எதிர்த்து, அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கருணை அடிப்படையில் எஸ்டேட் பாதையை பொது மக்கள் பயன்படுத்த கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் கோடநாடு எஸ்டேட் பாதையை பொது மக்கள் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
0 comments :
Post a Comment