விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு ஆகியவை சென்ற வருடமும் கோலிவுட்டின் டார்லிங் த்ரிஷாதான் என்பதை நிரூபித்திருக்கின்றன. இந்தியில் அறிமுகமானது இன்னொரு விசேஷம். புது வருடத்தில் அஜித்துடன் அமர்க்களமாக மங்காத்தா ஆடத் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார் த்ரிஷா. மன்மதன் அம்பில் கமலுடன் நடித்த அனுபவ மணம் மாறாமல் வருகின்றன த்ரிஷாவின் வார்த்தைகள்.
த்ரிஷா ரசிகர்களுக்கு வருடக் கடைசியில் அவர் பாடியது காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்த அனுபவம். த்ரிஷா இனி தொடர்ந்து பாடுவாரா?
ஆய்தஎழுத்துக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக சொந்தக் குரலில் பேசினேன். கமல் சார் கேட்டுக் கொண்டதாலும், பாடுவது கமல் சாருடன் என்பதாலும் அந்தப் படத்தில் பாடினேன். மற்றபடி நடிக்கவே எனக்கு நேரமில்லை. ஆனால் சந்தர்ப்ப சூழல் அமைந்தால் மீண்டும் பாடுவேன்.
இந்திக்கு சென்ற அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்திதான் எனது இலக்கு என முடிவெடுத்து மும்பையில் தங்கியிருக்கிறார் லட்சுமிராய். த்ரிஷாவும் பாலிவுட் பக்கமாக ஒதுங்கிவிடுவாரோ என்பது அவரது ரசிகர்களின் பயம்.
சென்ற வருடம் கட்டா மிட்டாவில் நடித்தது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். படம் சரியாகப் போகவில்லையென்றாலும் என்னை அறிமுகப்படுத்திய ப்ரியதர்ஷனுக்காக நடித்தது ரொம்பவே நிறைவைத் தந்தது. ஆனால் தொடர்ந்து இந்தியில் நடிக்கிற எண்ணம் இல்லை. தென்னிந்தியாவில் என்னுடைய மார்க்கெட் நன்றாக இருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்வதில்தான் என்னுடைய கவனம் முழுவதும் இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் என்றால் மட்டும் இந்தியில் நடிப்பது பற்றி யோசிப்பதாக இருக்கிறேன். இப்போதைக்கு இந்தியில் நடிக்கும் எண்ணம் எதுவுமில்லை.
த்ரிஷா கடைசியாக நடித்த தமிழ்ப் படம் மன்மதன் அம்பு, கமல் ஹீரோ. தற்போது நடித்துவரும் படம் மங்காத்தா, அஜித் ஹீரோ. தெலுங்கிலும் பவன் கல்யாண்,வெங்கடேஷ் என்று முன்னணி நடிகர்களாகத்தான் இருக்கிறது த்ரிஷாவின் சாய்ஸ். இளம் நடிகர்களை த்ரிஷா விலக்குகிறாரா?
அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதை, கேரக்டர் அமைந்தால் யாருடனும் நடிப்பேன். சர்வத்தில் ஆர்யாவுடன் நடித்திருக்கிறேனே. விண்ணைத்தாண்டி வருவாயில் சிம்புதானே ஹீரோ.
சென்ற வருடம் வெளியான த்ரிஷாவின் படங்கள் இரண்டு; ஹிட், ஒன்று சுமார். த்ரிஷாவுக்கு இதில் திருப்தியா?
0 comments :
Post a Comment