background img

புதிய வரவு

உணவுப் பணவீக்கம்: அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

உணவுப் பணவீக்கம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

வெங்காயம், பால் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக டிசம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 18.32 விழுக்காடாக உயர்ந்தது.

போதிய விநியோகம் இல்லாததால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், உணவுப் பணவீக்க விகிதம் குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளும் உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts