உள் நாட்டுப் போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை சிறிலங்க அரசு மறுகுடியமர்த்தம் செய்து வருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதென கூறியுள்ள ஐ.நா. மனிதாபி விவகாரத்திற்கான துணை பொதுச் செயலர் கேத்தரின் பிராக், மறுகுடியமர்த்தம் செய்யப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய அளவிற்கு முதலீடு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இலங்கையில் 3 நாள் பயணம் மேற்கொண்ட கேத்தரின் பிராக், நியூ யார்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
தனது 3 நாள் பயணத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதியையும், போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான வடக்கு பகுதிகளுக்கும் சென்று வந்ததாகக் கூறியுள்ள கேத்தரின் பிராக், போரின் முடிவிற்குப் பிறகு வன்னி முகாம்களில் அடைக்கலமான 3 இலட்சம் பேரில் 20 ஆயிரம் பேர் தவிர மற்ற அனைவரும் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயினும் அவர்களின் வாழ்க்கை கடும் போராட்டத்தில் உள்ளதெனவும் கூறியுள்ளார்.
‘அவர்களுக்கு இன்னமும் நான் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ள கேத்தரின், “கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னமும் முடிவுறாத நிலையில், முகாம்களில் உள்ள 20 ஆயிரம் பேரும் இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை முகாம்களிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
“வன்னி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு கொண்டு சென்று குடியமர்த்தப்படவில்லை. பல்லாயிரக்கணகான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது” என்று கூறியுள்ள கேத்தரின், “மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளையும், உள்கட்டமைப்பையும் அரசு ஏற்படுத்தி வருகிறது என்றாலும், அவர்கள் வாழ்வதற்கு இருப்பிடங்களும், குடிநீரும், கழிவு வசதிகளும், மருத்துவ வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு செய்ய வேண்டிய மனிதாபிமான உதவிகள் இன்னமும் அதிகம் உள்ளன” என்று கூறியுள்ளார்.
“இந்த மக்களின் வாழ்க்கை மிக ஆபத்தான நிலையில் உள்ளது. மக்கள் வாழ்விற்கான முதலீட்டில்தான் வடக்கு மக்களின் எதிர்காலம் உள்ளது. அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை முறைபடுத்திக்கொள்ள திறன் மேம்பாடும், வாழ்க்கை வசதிகளும், சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களும் தேவை” என்று அங்கு நிலவும் கடுமையான சூழலை வர்ணித்துள்ளார் கேத்தரின் பிராக்.
கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண வசதிகள் செய்துத்தர 51 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்று கூறியுள்ள கேத்தரின், அந்த நிதிக்கு ஐ.நா.வின் அவசர சூழல் உதவி நிதியிலிருந்து 6 மில்லியன் டாலர் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment