லால் சவுக்கில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்து கைதான பா.ஜனதா மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,அருண் ஜெட்லி மற்றும் அனந்தகுமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
குடியரசு தினத்தன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றுவதற்காக புறப்பட்ட பா.ஜனதா கட்சியின் இளைஞரணி யாத்திரை, மாநில எல்லையில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது.
கட்சித் தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு,ஹால்மார்க் ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில்,இன்று அவர்களை காஷ்மீர் காவல்துறையினர் விடுதலை செய்தனர். அவர்களுடன் பா.ஜனதா இளைஞரணித் தலைவர் அனுராஜ் தாக்கூர் மற்றும் சாந்தகுமார் உள்ளிட்ட 200 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட அவர்கள் காவல்துறை பேருந்துகள் மூலம் பஞ்சாப்பில் உள்ள மதோபூருக்கு கொண்டுவந்து விடப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,காஷ்மீர் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
முதல்வர் ஒமர் அப்துல்லா ஒருபக்கம்,ஸ்ரீநகரில் கொடியேற்றுவதை தடுத்துநிறுத்திவிட்டு பிரிவினைவாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளிக்கிறார்.மறுபக்கம் தேசியக் கொடியேற்றும் விழாவில் கலந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
இப்போது விழா முடிந்ததும்,எங்களை விடுதலை செய்துள்ளனர்.ஜம்முவில் இதற்கு தகுந்த எதிர்ப்பைக் காட்டுவோம் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment