''கடையடைப்பு செய்யும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா சட்டம்பாயும்'' என்று டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஷீலா தீட்சித், நாடுமுழுவதும் வெங்காய விலை உயர்ந்துள்ளது என்றும் எனினும் வரும்நாட்களில் கூட்டுறவு சங்க கடைகளில் வெங்காயம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விபாயாரிகள் நடத்தும் போராட்டம் குறித்து அரசு கவனத்தில்கொண்டிருப்பதாகவும், வெங்காய வியாபாரிகள் மீது அத்தியாவசிய சேவைபராமரிப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷீலா தீட்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையான டெல்லி ஆசாத்பூரில் வருமானவரித்துறையினர் 2 நாட்களுக்கு முன்னர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில்ஈடுபட போவதாக வெங்காய வியாபாரிகள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கத.
0 comments :
Post a Comment