இராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்காக உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, இராணுவ தலைமை தளபதி வி.கே. சிங், இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்னர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இராணுவ வீரர்களுக்கு ரேஷன் முறையில் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்த விபரங்கள் தணிக்கைக்குட்படுத்தப்பட்டது.
அதில் கடந்த நிதியாண்டில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்ததோடு, அது குறித்து தணிக்கை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து முப்படை தளபதிகளும் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து இராணுவ தலைமை தளபதியான வி.கே. சிங் இன்று, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.
விமானப்படை தலைமை தளபதியும் இன்று ஆஜராவார் என்று தெரிகிறது.
அதே சமயம் கடற்படை தளபதி நிர்மல் வர்மா இந்தோனேஷியா சென்றுள்ளதால் அவர் சார்பில் துணை தளபதியான டி கே திவான் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment