background img

புதிய வரவு

மாஸ்கோ குண்டு வெடிப்பு பலியானவர்களுக்கு அஞ்சலி

மாஸ்கோ : மாஸ்கோ விமான நிலைய குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக ரஷ்யாவில் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே, டொமொடிடோவோ சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் பயங்கர குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 35 பேர் பலியாயினர்; 180 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்காக ரஷ்ய அரசு துக்கம் அனுசரிக்கிறது. இதையொட்டி, மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர்களுக்கு சர்ச் மற்றும் மசூதிகளில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரிட்டன், ஜெர்மனி, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பலியாகியுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை அதிபர் மெட்வடேவும், பிரதமர் புடினும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts