துபாய் : "இந்திய மீடியாக்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் போல் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கூறினார். ஐ.பி.எல்., கிரிக்கெட் விவகாரத்தில் சிக்கி, பதவி இழந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர், துபாய் சென்றுள்ளார். டோகாவில் அவருக்கு இந்திய கலை மற்றும் கலாசார மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவ்விழாவில் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவில் மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றன. எவ்வளவோ பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர். அது பற்றி கவனம் செலுத்தாமல், எதிர்மறையான விஷயங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றன. ஏதோ வக்கீல்கள் போலவும், நீதிபதிகள் போலவும் செயல்படுகின்றன. குற்றச்சாட்டுகளை அவர்களே முடிவு செய்து தீர்ப்பு கிடைக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களை பலிகடா ஆக்கி விடுகின்றனர்.
எந்தவொரு அரசியல்வாதி பற்றியும் ஊழல் குற்றச்சாட்டை மீடியாக்கள் மக்கள் நம்பி விடுகின்றனர். இதுதான் இந்தியாவில் உள்ள நிலைமை. இதில் விதிவிலக்கு ஏ.கே.அந்தோணி, பிரதமர் மன்மோகன் சிங். மீடியாக்கள் கிளம்பி விடும் பூதாகரமான விஷயங்களை, இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் தான் நம்பி விடுகின்றனர். இந்தியாவில் தலைவிரித்தாடும் ஊழலால், பொதுமக்களுக்கு சாதாரணமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது.
ஒரு ஏழை பெண் ஒருவர், தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். லஞ்சம் கொடுத்தால் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது முக்கியமான பிரச்னை. இதை பற்றி எந்த மீடியாவும் வெளிச்சம் போட்டு காட்டுவது இல்லை. எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விடுகின்றன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை பற்றி பிரபலப்படுத்த இந்திய மீடியாக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு இந்திய மீடியாக்களை சசி தரூர் ஒரு பிடி பிடித்தார்.
மத்திய லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமனம் பற்றி மீடியாக்கள் மலிவு பிரசாரம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சசி தரூர் கடந்த மாதம் குறிப்பிட்டு இருந்தார்.

0 comments :
Post a Comment