
காங்கிரஸ் சார்பில் செங்கம் தனித் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் போளூர் வரதன்.
உடல் நலக்குறைவால் கடந்த 24ஆம் தேதி மேடவாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அவர் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தகனம் சென்னையில் நாளை நடக்கிறது.
1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போளூர் வரதன், 2001 முதல் தொடர்ந்து 2 முறை செங்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
0 comments :
Post a Comment