பால் கொள்முதல் விலை உயர்வு - கருணாநிதி
சென்னை: பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 10 காசுகளும், எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 20 காசுகளும் உயர்த்தி வழங்கிட இன்று ஆணையிட்டுள்ளார். இந்த விலை உயர்வால் நுகர்வோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தற்போது சூசூஆவின்'' மூலமாக விநியோகம் செய்யப்படும் பால் விற்பனை விலையை உயர்த்துவதில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது. இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள.
0 comments :
Post a Comment