நெல்லையில் விளம்பர போர்டுகள் அகற்றம் : போலீஸ் குவிப்பு
நெல்லை : நெல்லை மாநகராட்சியின் பல இடங்களில் அரசியல் கட்சிகள், விளம்பர நிறுவனங்கள் என போட்டி போட்டி விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, அரசியல் கட்சிகளிடையே பல்வேறு பிரச்னைகளையும் உருவாக்கி உள்ளது. இந்த விளம்பர பலகைகள் ஜனவரி 10ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட துணை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு அகற்றப்படாமல் இருந்தால் மாநகராட்சி சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த பலகைகள் அகற்றப்படாததால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வண்ணா பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment