background img

புதிய வரவு

2050ல் இந்திய பொருளாதாரம் 2ம் இடத்தை பிடிக்கும்: அமெரிக்கா பின்தங்கும்

புதுடெல்லி: பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர், ‘தி வேர்ல்டு இன் 2050’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், 2009ம் ஆண்டில் இந்தியா 4ம் இடத்தில் இருந்தது.

வேலைக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 2050ம் ஆண்டில் வாங்கும் சக்தியில் 2ம் இடத்தைப் பிடிக்கும். இதன்மூலம் பொருளாதாரத்தில் அமெரிக் காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2ம் இடத்தை பிடிக்கும். பொருளாதாரத்தில் இப்போது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை 2020ம் ஆண்டுக்குள் சீனா முந்திவிடும்.

சீனாவின் ஒரு குழந்தை திட்டத்தால் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, 2050ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts