திருப்பதி : ஆந்திராவில், காங்கிரஸ் ஆட்சியில் பிரஜா ராஜ்யம் கட்சி இடம்பெறாது என்று, நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். ஆந்திர அரசு சார்பில், திருப்பதி தொகுதியின் பல்வேறு இடங்களில், "ரக்ஷா பந்தா' என்ற மக்கள் நல்வாழ்வு திட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் கலந்து கொள்வதற்காக, பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவரும், திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நடிகர் சிரஞ்சீவி வந்தார். அப்போது, அவர் கூறுகையில் " ஆந்திர காங்கிரஸ் அரசில், பிரஜா ராஜ்யம் கட்சி இடம்பெறாது' என்று தெரிவித்தார்.
"ரக்ஷா பந்தா' என்ற மக்கள் நல்வாழ்வு நிகழ்ச்சி பொறுப்பாளரும், அம்மாநில வருவாய் துறை அமைச்சருமான ரகுவீர ரெட்டி நிருபர்களிடம், "ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்பெறுவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இத்திட்டத்தினை கொண்டு வந்தார். இது அவரது கனவுத் திட்டமாகும். அதை, தற்போது, சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி' என்றார்.
0 comments :
Post a Comment