background img

புதிய வரவு

தேனீர் விருந்து பங்கேற்காதது ஏன்? முதல்வர் எடியூரப்பா விளக்கம்

பெங்களூரு: ""ராஜ்பவன், தேனீர் விருந்தில், கலந்து கொள்ள இயலாது, என்று ஏற்கனவே கவர்னர் பரத்வாஜிடம் தெரிவித்துவிட்டேன்,'' என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். மைசூருவில், நிருபர்களிடம், முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: ராஜ்பவனில், கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் கலந்து கொள்ள இயலவில்லை. ஏற்கனவே, மைசூரு கணபதி தேவஸ்தான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக முடிவு செய்திருந்தேன். இது குறித்து கவர்னர் பரத்வாஜிடம், பரேடு மைதானத்தில் தெரிவித்து விட்டேன். இதை, காங்., - ம.ஜ.த.,வினர் அரசியலாக்குகின்றனர்.
நான் பதவியேற்ற காலத்திலிருந்து, ஏதாவது ஒரு காரணம் காட்டி, என்னை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சி காலம் முடியும் வரை, நான் பதவியில் நீடிப்பேன். வரும் தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெற்று, நான் தான் முதல்வராக தொடருவேன் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts