கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்க சிறைக்குள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் யோகா, தியான பயிற்சிகள், வாழ்வியல் திறன் பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. எந்த வகையிலும் குற்ற உணர்வு எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கைதிகளை ‘இல்லவாசிகள்’ என அழைக்கவும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முக்கிய விழாக்களின்போது கைதிகளின் மனம் மகிழும் வகையில் அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கைதிகளுக்கும் பாட்டு, கவிதை, கட்டுரை, மியூசிக் சேர், நடனப்போட்டிகளும், வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சிறை காவலர்களுக்கும் வாலிபால் போட்டி நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
0 comments :
Post a Comment