ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியதாக இருப்பதால், பொதுநலன் கருதி ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் தயாரிப்பு மற்றும் உபயோகத்த்திற்கு தடை விதிக்க கோரி தடை செய்யவேண்டும் என்று அரசு சாரா பொது நல அமைப்பு ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதே சமயம மத்திய மாநில அரசுகளை இது சம்பந்தமான விதிமுறைகளை நெறிமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்பெஸ்டாஸ்களை தற்காலிக சுவர் அமைக்கவும், கூரை வேய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொது விதிகள் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment