ஒரிஸ்ஸாவில் ஆஸ்ட்ரேலிய பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தாராசிங்கிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் கோன்ஹார் மாவட்டத்தில் ஆஸ்ட்ரேலிய பாதிரியார் கிராஹம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது 2 மகன்கள் ஆகியோர், கடந்த 1999 ஜனவரி 22 ஆம் தேதி் ஜீப்போடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாரா சிங்குக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மகேந்திரா தவிர மற்ற 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது. மேலும் மகேந்திராவுக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

0 comments :
Post a Comment