background img

புதிய வரவு

‘தனிதெலங்கானா’ வலியுறுத்தி ஆந்திராவில் மாணவர்கள் பந்த்

சித்தூர்: ஆந்திராவில் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போலீசாரும், ராணுவத்தினரும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பிரித்து தனித்தெலங்கானா அமைப்பது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை மத்திய அரசு நேற்று  வெளியிட்டது.

ஆனால், ‘ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையை ஏற்க முடியாது, ஐதராபாத்தை தலைநகராக கொண்ட தனித்தெலங்கானா மாநிலம்  அமைவதே எங்களது ஒரே கோரிக்கை’ எனக்கூறி தெலங்கானா பகுதி மாணவர் கூட்டமைப்பினர் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கு தெலங்கானா அரசியல் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐதராபாத் மற்றும்  ரங்காரெட்டி, நலகொண்டா, வாரங்கல், கம்மம், மகபூப் நகர், நிசாமாபாத் உள்ளிட்ட தெலங்கானா மாவட்டங்களில் உள்ள அனை த்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டன. மேலும், இன்று நடைபெற இருந்த சில தேர்வுகளும் ரத்து  செய்யப்பட்டன.

இதனிடையே தெலங்கானாவுக்கு ஆதரவாக ஸ்ரீகிருஷ்ணா சிபாரிசு செய்யவில்லை எனக்கூறி உஸ்மானியா பல்கலைக்கழக  மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நேற்று கற்களை வீசினர். இதனால் போலீசாருக்கும்,  மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், ரப்பர் தோட்டாக்களால் 15 ரவுண்ட்கள் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்த  மாணவர்களை கலைத்தனர். இந்த மோதலில் 24 போலீசார் மற்றும் 5 மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர் ரவிக்குமார் என் பவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரை காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், அரசு பஸ்களுக்கு  ஒரு கும்பல் நேற்று தீ வைத்தது. இதில் 2 பஸ்கள் எலும்புக் கூடாகின. தெலங்கானா மாவட்டத் தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ராணுவம் மற்றும் போலீசார் விடியவிடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்த் காரணமாக  ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலு ங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரது வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி, டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவின் வீடு மற்றும் சினிமா  நடிகர், நடிகைகள், அனைத்து அரசியல் பிரமுகர்கள், அனைத்து எம்பி, எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி டிஆர்எஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள  கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவற்றின் எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழு வதும் பதற்றம் நிலவுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts