மகாராஷ்ட்ராவில் துணை கலெக்டர் ஒருவர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து அம்மாநில அரசு அதிகாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்ட்ரா மாவட்ட துணை கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே என்பவர்,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்ட்ரா அரசின் கெஜட்டட் அந்தஸ்திலான அதிகாரிகள் சங்கம் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.
இதற்கு மற்ற ஊழியர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.அதன்படி இன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் அரசு பணிகள் முடங்கின.பல அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
0 comments :
Post a Comment