தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசின் சி, டி பிரிவு அலுவலர்களுக்கு 30 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்றும் ரூ. 3000 உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 1000 சிறப்பு போனஸ் வழங்கப்படும். முன்னாள் கிராம அலுவலர்களின் கோரிக்கை ஏற்று ரூ. 500ம், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500ம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல் போனஸ் வழங்கப்படுவதினால் அரசுக்கு ரூ. 277 கோடி செலவாகிறது.
0 comments :
Post a Comment