டெல்லி சென்றார் பிரதமர்!
மீனம்பாக்கம்: பிரதமர் மன்மோகன் சிங் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிகாப்டரில் 12.05 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து 12.35 மணிக்கு தனி விமானத்தில் மன்மோகன் சிங் டெல்லி புறப்பட்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அரசு தலைமை செயலாளர் மாலதி, டிஜிபி லத்திகா சரண், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் ஆற்காடு வீராசாமி உள்பட தமிழக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் சால்வை கொடுத்து வழியனுப்பினர். மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்
0 comments :
Post a Comment