தமிழகத்தில் காய்கறி கடைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை: தமிழகத்தில் காய்கறி கடைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காய்கறிகளை அதிக லாபத்திற்கு வியாபாரிகள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, பொள்ளாச்சி, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும் காய்கறி விற்பனையில் வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றி அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் காய்கறி கடைகளில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment