இந்நிலையில், நெரிசலைச் சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்;
சென்னை சென்ட்ரல்-திருநெல்வேலி (06009): சென்ட்ரலில் இருந்து 12ம் தேதி இரவு 7.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.35 மணிக்கு நெல்லைக்கு சென்று சேரும்.
திருநெல்வேலி-சென்னை சென்ட்ரல் (06010): திருநெல்வேலியில் இருந்து 13ம் தேதி பிற்பகல் 2.55- க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
சென்னை - சென்ட்ரல்- செங்கோட்டை விரைவு ரயில் (மயிலாடுதுறை வழி) (06011): இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து 11ம் தேதி இரவு 9.50- க்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்று சேரும்.
செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (06012) (விருத்தாச்சலம், எழும்பூர் வழி): இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து 12ம் தேதி பிற்பகல் 2.30- க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி விரைவு ரயில் (மயிலாடுதுறை வழி) (06103): இந்த ரயில் எழும்பூரில் இருந்து 15ம் தேதி இரவு 10.45- க்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (06104) (விருத்தாச்சலம் வழி): இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து 16ஆம் தேதி பிற்பகல் 2.55-க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய நாளை சனிக்கிழமை (ஜன.,8) முதல் முன்பதிவு தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment