background img

புதிய வரவு

சபரிமலை விபத்துக்கு யார் காரணம்? தேவஸ்வம் போர்டு விளக்கம்

கடந்த 14 ஆம் தேதியன்று சபரிமலை விபத்து நடைபெற்ற இடம் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் இல்லை என்றும், விபத்துக்கு தங்கள் நிர்வாக தோல்விதான் காரணம் என்று கூறுவதை ஏற்கமுடியாது என்றும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை கோவிலில் இருந்து விபத்து நிகழ்ந்த இடம் வடக்கு திசையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியேதான் அந்த இடம் உள்ளது. எனவே, கோவில் நிர்வாகத்தின் தோல்வியால்தான் அந்த விபத்து ஏற்பட்டது என்ற பிரசாரம் உண்மைக்குப் புறம்பானது. பெரிதும் மன்னிக்க முடியாத தகவலாகும்.

சபரிமலைக்கு இந்த முறை மிக அதிகளவில் பக்தர்கள் வந்துள்ளனர். நவம்பர் மாதம் தொடங்கிய பக்தர்களின் வருகை சமூகமாகவே இருந்தது. கோயில் சன்னிதானத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. உதவி வழங்கிய அனைவருக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts