background img

புதிய வரவு

மூன்றாவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 232/4


கேப்டவுன், ஜன.2: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித், பீட்டர்சன் ஆகியோர் முதல் இன்னிங்ûஸ துவக்கினர். ஜாகீர்கான் ஆரம்பம் முதலே பவுன்சர்களை வீசி தொடக்க வீரர்களை தடுமாறச் செய்தார். குறிப்பாக ஸ்மித் மிகவும் தடுமாறினார். இதை சரியாகப் பயன்படுத்திய ஜாகீர்கான் 7-வது ஓவரில் ஸ்மித்தை வெளியேற்றினார். இதையடுத்து ஆம்லா களம் புகுந்தார்.

மழை குறுக்கீடு: 9 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, ஸ்ரீசாந்துக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் தோனி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. பீட்டர்சனை 21 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா.

அடுத்து வந்த காலிஸ், ஆம்லாவுடன் சிறப்பாக விளையாடினார். ஆம்லா 59 ரன்களில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 74 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. காலிஸ் 81 ரன்களுடனும், பிரின்ஸ் 28 ரன்களுடனும் உள்ளனர்.



0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts