background img

புதிய வரவு

சென்னை ஓபன் இன்று கோலாகல தொடக்கம்


சென்னை, ஜன.2: 16-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று ஆட்டங்கள் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, கனடாவின் பிராங்க்டேன்சேவிக் - ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஜோடியை எதிர்கொள்கிறது.

பயஸ்-பூபதி ஜோடி 1997, 1998, 1999, 2002 ஆகிய ஆண்டுகளில் சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளது.

2002-ம் ஆண்டுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இப்போது மீண்டும் இணைந்து விளையாடவுள்ளனர். இதனால் பயஸ்-பூபதி ஜோடி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஓபன் நீங்கலாக அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளது. சென்னை ஓபன், இந்தியாவில் நடைபெறுவதால் இந்த ஜோடிக்கு பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சோம்தேவ்-சனம் சிங் ஜோடி மற்றும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சோம்தேவ்-சனம் சிங் ஜோடி

இந்தியாவின் சோம்தேவ்-சனம் சிங் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்டின் ஜோடியை எதிர்கொள்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற உற்சாகத்தில் இந்திய ஜோடி களமிறங்குகிறது.

மேலும் சோம்தேவ் நீண்ட காலமாக சென்னையில் பயிற்சி பெற்றவர். அதனால் அவர் சிறப்பாக விளையாடுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மரின் சிலிச்

திங்கள்கிழமை நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளவருமான குரேஷியாவின் மரின் சிலிச், தரவரிசையில் 91-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொள்கிறார்.

மரின் சிலிச், இந்த முறையும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை பட்டம் வென்றால் தொடர்ச்சியாக மூன்று முறை பட்டம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

சோம்தேவ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இருப்பினும் சென்னை ஓபனில் பட்டத்தைக் கைப்பற்ற அவர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். ஆட்டங்கள் மாலை 5 மணிக்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க ஏராளமான ரசிர்கள் மைதானத்திற்கு படையெடுப்பது வழக்கமாகும்.

இன்றைய ஆட்டங்கள் ஒற்றையர் பிரிவு

1. மரின் சிலிச் (குரேஷியா) ஸ்ள் கெய் நிஷிகோரி (ஜப்பான்).

2. ஜோர்ன் பாவ் (ஜெர்மனி) ஸ்ள் சைமன் பொலேலி (இத்தாலி).

3. ராபர்ட் ஹென்ட்ரிக் (அமெரிக்கா) ஸ்ள் டெனிஸ் கிரீமெல்மேயர் (ஜெர்மனி).

4. ஸ்டீபேனே ராபர்ட் (பிரான்ஸ்) ஸ்ள் ஆண்ட்ரூஸ் ஹெய்டர் ((ஆஸ்திரியா).

5. ஜான்கோ டிப்சரேவிக் (செர்பியா) ஸ்ள் எட்வர்டு ஸ்வாங்க் (ஆர்ஜென்டீனா).

6. மார்க்ஸ் டேனியல் (பிரேசில்) ஸ்ள் இவான் டோடிக் (குரேஷியா).

இரட்டையர் பிரிவு

1. மகேஷ் பூபதி-லியாண்டர் பயஸ் (இந்தியா) ஸ்ள்

பிராங்க் டேன்சேவிக் (கனடா)- வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து).

2. சோம்தேவ்- சனம் சிங் (இந்தியா) ஸ்ள்

ராபின் ஹேசி (நெதர்லாந்து)-டேவிட் மார்டின் (அமெரிக்கா).

3. ஷேவியர் மலிஸ் (பெல்ஜியம்)-ஜேமி முர்ரே (பிரிட்டன்) ஸ்ள்

பிலிப் மார்க்ஸ் (ஜெர்மனி)- கென் கப்ஸ்கி (பிரிட்டன்).

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts