"மாஸ்கோவின் காவிரி” தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் சமந்தா. முரளி மகன் அதர்வா கதா நாயகனான “பாணா காத்தாடி” படத்திலும் ஜோடியாக நடித்தார். சிம்புவுடன் “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
சமந்தாவை திருப்பதியில் ஒரு கடையை திறந்து வைக்க நேற்று அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் சுற்றி வளைத்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கினார்.
இடுப்பை கிள்ளி அவர்கள் சில்மிஷம் செய்தனர். கைகளை பிடித்து இழுத்தார்கள். அவர்களிடம் இருந்து தப்ப முடியாமல் சமந்தா அலறினார். போலீசார் ஒரு சிலரே நின்றதால் சமந்தாவை மீட்க முடியவில்லை. அதிகம் இம்சை செய்த 3 ரசிகர்களை கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் சமந்தா.
நிலைமை மோசமாவதை உணர்ந்த விழாக்குழுவினர் கடை ஊழியர்களை அனுப்பி வைத்து சமந்தாவை ரசிகர்கள் பிடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். இதுபற்றி சமந்தா கூறும்போது, "ரசிகர்கள் நடத்தையால் ரொம்ப வேதனைப்படுகிறேன். நடிகர்களும் மனுஷங்க தான். அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள வேண்டும். கடையை திறந்து விட்டு திருப்பதி கோவிலுக்கு போய் ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டு இருந்தேன். மனவேதனையால் கோவிலுக்கு போகமலேயே திரும்பிச் செல்கிறேன்" என்றார்.
0 comments :
Post a Comment