டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே யான 3 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்னிலும், டர்பனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 87 ரன்னிலும் வெற்றி பெற்றன. கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் “டிரா” ஆனது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டி டர்பனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் காயம் அடைந்து உள்ளதால் நாளை விளையாட மாட்டார் என தெரிகிறது.போத்தா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் மட்டுமே 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.
இதனால் அவர் ஆடமாட்டார். இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
டென் கிரிக்கெட் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோக்லி, ரெய்னா, யுவராஜ்சிங், யூசுப்பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெக்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், தெண்டுல்கர், அஸ்வின், பியூஸ் சாவ்லா, பிரவீண்குமார்.
தென்ஆப்பிரிக்கா: போத்தா (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, கோலின் இங்ராம், மில்லர், பீட்டர்சன், நிதினி, பர்னல், தெரான், டிசோட்சோபே
0 comments :
Post a Comment