background img

புதிய வரவு

தொடரை வென்றது பாக்.,: 2வது டெஸ்ட் "டிரா'

வெலிங்டன்: நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் "டிரா' ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வெற்றி கண்ட பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 356, பாகிஸ்தான் 376 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 293 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
யூனிஸ்-மிஸ்பா அபாரம்:
நேற்று 5ம் நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற 2வது இன்னிங்சில் 274 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஹபீஸ் (32), டயுபிக் உமர் (0), அசார் அலி (10) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். பின்னர் இணைந்த அனுபவ யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது யூனிஸ் கான் (81) அவுட்டானார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் (24) சோபிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இப்போட்டி "டிரா' என அறிவிக்கப்பட்டது. மிஸ்பா (70), அத்னன் அக்மல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் கிறிஸ் மார்டின், டிம் சவுத்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா தேர்வு செய்யப்பட்டார்.
5 ஆண்டுக்கு பின்:
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. தவிர, 5 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றுள்ளது. முன்னதாக கடந்த 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பாகிஸ்தானில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.வெலிங்டன்: நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் "டிரா' ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வெற்றி கண்ட பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 356, பாகிஸ்தான் 376 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 293 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
யூனிஸ்-மிஸ்பா அபாரம்:
நேற்று 5ம் நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற 2வது இன்னிங்சில் 274 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஹபீஸ் (32), டயுபிக் உமர் (0), அசார் அலி (10) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். பின்னர் இணைந்த அனுபவ யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது யூனிஸ் கான் (81) அவுட்டானார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் (24) சோபிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இப்போட்டி "டிரா' என அறிவிக்கப்பட்டது. மிஸ்பா (70), அத்னன் அக்மல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் கிறிஸ் மார்டின், டிம் சவுத்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா தேர்வு செய்யப்பட்டார்.
5 ஆண்டுக்கு பின்:
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. தவிர, 5 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றுள்ளது. முன்னதாக கடந்த 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பாகிஸ்தானில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts