நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 21 ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகின்ற போதிலும், 25 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கொள்ளவிருக்கும் அலுவல்கள் குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment