background img

புதிய வரவு

விருகம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த போதைப்பெண்: பொதுமக்கள் பீதி

விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு நிறுத்தி இருந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் இன்னொரு பைக் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது.
 
இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு பகுதி மக்கள் பதறியடித்து வீட்டிலிருந்து வெளியே வந்தனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அணைத்தனர். அதன் அருகிலேயே மின்சார பெட்டி ஒன்று இருந்தது. அதில் தீ பரவாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து விருகம்பாக் கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.   அப்போது அங்கிருந்தவர்கள் அதே குடியிருப்பில் வசிக்கும் அனுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்தான் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார் என புகார் கூறினர்.
 
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் அழைத்து விசாரணை செய்தபோது அவர் போதையில் இருந்ததும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததும் தெரிந்தது. மேற்கொண்டு அவரிடம் எதுவும் விசாரிக்காமல் போலீசார் இரவு சென்று விட்டனர்.
 
இதையடுத்து இன்று காலை குடியிருப்பு பொது மக்கள் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று தீ வைப்பில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
 
மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts