background img

புதிய வரவு

மின்சாரம் தாக்கி இறந்த யானைக்குட்டிகளை பிரிய மறுத்த தாய் யானை; மீட்க சென்ற பொக்லைன் எந்திரத்தை தும்பிக்கையால் இடித்து தள்ளியது

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வாதேபுர்- அலூர் தாலுகாவில் யானை ஒன்று தன் ஆண், பெண் குட்டிகளுடன் வயலில் உள்ள பயிர்களை திண்பதற்காக சென்றது.   அங்கு வயலில் நீர் பாய்ச்சு வதற்காக மோட்டாருக்கு திறந்தவெளியில் மின்சார ஒயர் மூலம் மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
 
தாய் யானையுடன் வந்த ஆண், பெண் யானைக்குட்டி கள் பயிர்களை சாப்பிட செல்லும்போது மின்சார ஒயரை மிதித்து விட்டன. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு 2 குட்டி களும் பிளிறியபடி கீழே சுருண்டு விழுந்து இறந்தன. இதைக்கண்ட தாய்யானை அருகில் சென்று கண்ணீர் வடித்தப்படி நின்று கொண்டு பிளிறியது.
 
கிராமவாசிகள் அனைவரும் உடனே ஓடி வந்து நடந்த சம்பவத்தை அறிந்து யானைக்கு உதவிட நினைத்தனர். ஆனால் யாரையும் அருகி லேயே நெருங்க விடாமல் குட்டிகளின் அருகிலேயே சோகமாக நின்று கொண்டி ருந்தது. இதுபற்றி விவசாயிகள் வன இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து தாய் யானையை விரட்ட முயற்சி செய்தனர். யானை பிளிறியபடியே சென்றது.
 
சில மணி நேரங் களில் மீண்டும் திரும்பி வந்தது. அங்கு வயலில் இருந்த பொக்லைன் எந்திரத்தை தனது தும்பிக்கையால் இடித்து தள்ளியது. தாய் யானையின் ஆத் திரம் தனியட்டும் என்று அதிகாரிகள் பொறுமை காத்து யானையின் செயல் பாடுகளை கண்காணித்தனர்.
 
பின்னர் வெகுநேரம் கழித்து தாய் யானை கண்ணீர் விட்டபடி அந்த இடத்தை விட்டு சென்றது. பயிர்களை நாசப்படுத்தும் யானைகளுக்காக விவ சாயிகள் மின்வேலி அமைப் பது உண்டு. அதுபோல் அங்கு மின்வேலி அமைக்கப் படவில்லை. மின் மோட்டாருக்கு இணைப்பு கொடுத்த ஒயரில் மின்கசிவு இருந்ததே யானைக்குட்டிகள் இறந்த தற்கு காரணம் என்று கூறப் படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts