background img

புதிய வரவு

வார பலன்(17 - 24 ஜனவரி 2011)

மேஷம்
பொல்லாதவர்கள் என சிலர் உங்களை தூற்றினாலும் அதைப் பற்றி கவலைப் படாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக மனசைப் புரிந்துக் கொள்வார்கள். புதன் சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சூரியன் 10-ல் நிற்பதால் இழுபறி நிலை மாறும். பதவிகள் தேடி வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். கன்னிப்பெண்களே! புது வேலைக் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கலைத்துறையினர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தன்னடக்கத்துடன் செயல்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 18, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு
 
ராசி குணங்கள்
ரிஷபம்
பாதியிலேயே பலர் ஒதுங்கிக் கொண்டாலும் தொடர்ந்து போராடி தொட்ட காரியத்தை முடிப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வீடுகட்டும் பணிகளை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். எதிர்மறை சிந்தனைகள் மறையும். சகோதரிக்கு திருமணம் முடியும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். புதனும், ராகுவும் 8-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், சோர்வு, கண் வலி வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! மேலிடத்தை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். தொந்தரவுகள் நீங்கி சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, கிரே அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு
 
ராசி குணங்கள்
மிதுனம்
யார் மனதும் நோகாதபடி நடந்துக் கொள்ளும் நீங்கள் எதிர்த்துப் பேசுபவர்களை கூட ஒதுக்கித் தள்ள மாட்டீர்கள். சூரியனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வாகனம் பழுதாகும். 8-ல் செவ்வாய் நிற்பதால் சொத்துப் பிரச்னை, சகோதர வகையில் சங்கடங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உங்களின் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 20, 21, 23 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு
 
ராசி குணங்கள்
கடகம்
மற்றவர்களை மகிழ வைத்து மகிழும் நீங்கள் சில நேரங்களில் கறாராக பேசுவீர்கள், கஞ்சத் தனம் இல்லாமல் வாரி வழங்குவீர்கள். யோகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். நகை வாங்குவீர்கள். சொத்து பிரச்னைகள் தீரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் விரிசல்கள் வரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளே! மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கன்னிப்பெண்களே! உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 18, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு
 
ராசி குணங்கள்
சிம்மம்
சுற்றியிருப்பவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர்கள். ராசிநாதன் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்ததால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்தை விற்று புது இடம் வாங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்களின் ஆலோசனை ஏற்பர். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்களே! தேமல், முகப்பரு நீங்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பாதச்சனி தொடர்வதால் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். குருவால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்‌தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். மூளை பலத்தால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு
 
ராசி குணங்கள்
கன்னி
மூளையை மூலதனமாக்கி முன்னேறும் நீங்கள், உறவினர்களை காட்டிலும் நண்பர்களால் அதிகம் மதிக்கப்படுவீர்கள். குருபகவான் வலுவாக நிற்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் சிறப்பாக அமையும். உங்கள் ராசிநாதன் புதன் ராகுவுடன் நிற்பதால் அவ்வப்போது வீண் டென்ஷன், காய்ச்சல், எதையோ இழந்ததைப் போல் ஒரு கவலைகள் வந்து நீங்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். தூக்கமின்மை வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்‌தியோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். கலைத்துறையினர்களே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். சிக்கல்களில் இருந்து விடுபடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 19, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, சில்வர்கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு
 
ராசி குணங்கள்
துலாம்
எதிரிக்கும் உதவும் பரந்த மனப்பான்மை கொண்ட நீங்கள், யார் நிழலிலும் வாழமாட்டீர்கள். ராசிநாதன் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவுப் பெருகும். 6-ல் குருவும், ஏழரைச் சனியும் தொடர்வதால் தாழ்வு மனப்பான்மையும், விமர்சனங்களும் வந்துப் போகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! மதிப்பு, மரியாதைக் கூடும். உழைப்பால் உயரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
பாமரன், படிப்பாளி என பாகுபாடு பார்க்காமல் பழகும் நீங்கள், கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். ராசிநாதன் செவ்வாய் 3-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்-. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். ராசிக்குள் சுக்ரன் நிற்பதால் அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். 17-ந் தேதி நண்பகல் 12. 30 மணி முதல் 18 மற்றும் 19ந் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வீண் பழி, சந்தேகம் வந்து விலகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்‌தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். வெற்றிக்கு வித்திடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 20, 22, 23 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு
 
ராசி குணங்கள்
தனுசு
வசதி வந்த போதும் வறுமையை மறக்காதவர்களே! பொது உடைமைவாதிகளே! சனி பகவான் வலுவாக இருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி. ஐ. பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குருபகவான் 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மேலிடத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். 19-ந் தேதி மாலை 6 மணி முதல் 20 மற்றும் 21-ந் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்‌தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும் கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். திட சிந்தனையால் வெல்லும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 18, 23 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பழுப்பு, மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு
 
ராசி குணங்கள்
மகரம்
பிறந்த மண்ணையும், பேசும் மொழியையும் வணங்கும் நீங்கள் தன்மானம் மிக்கவர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததை போல் வரன் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்களால் மதிக்கப்படுவீர்கள். செவ்வாயும், சூரியனும் சரியில்லாததால் மனஉளைச்சல், சிறுசிறு விபத்து, வாகனப் பழுது, சளி வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கை நிதானமாக கையாளப்பாருங்கள். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். 21-ந் தேதி இரவு 9 மணி முதல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த ஈகோ பிரச்சனை விலகும். உத்‌தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். இங்கிதமான பேச்சால் உயரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 18, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : நீலம், இளம்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு
 
ராசி குணங்கள்
கும்பம்
நகைச்சுவையாக பேசும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள் நல்லது செய்ய விரும்புவீர்கள். புதன் வலுவாக இருப்பதால் தோற்றப்பொலிவுக் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனைவிவழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். கன்னிப் பெண்களின் திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். சூரியனும், செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் முன்கோபம், அலைச்சல், திடீர் பயணங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆலோசனையின்றி புது முடிவுகள் எடுக்க வேண்டாம். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, சில்வர்கிரே அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு
 
ராசி குணங்கள்
மீனம்
எதையும் தாங்கும் இதயம் கொண்ட நீங்கள் பிரச்சனைகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். லாப வீட்டில் செவ்வாயும், சூரியனும் நிற்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதிதாக வீடு, நிலம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தூக்கமின்மை விலகும். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். ஜன்ம குருவும், கண்டகச் சனியும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, வீண் செலவு, காய்ச்சல் வந்து நீங்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். தன் பலம் பலவீனத்தை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 19, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், கிரே அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு
 
ராசி குணங்கள்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts