உலகக் கோப்பையை வென்றால் மகிழ்ச்சியடைவேன்: தோனி
கேப்டவுன், ஜன. 2: இந்திய அணி எனது தலைமையில் உலகக் கோப்பையை வென்றால் அதைவிட அதிக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தனக்கு வேறு எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.கேப்டவுனில் நடைபெற்ற உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து மேலும் கூறியது:ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் உலகக் கோப்பையை தங்கள் அணி வெல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் உலக்கோப்பை தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்திய ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதும் இதுதான்.உலகக் கோப்பையை வெல்வதற்கு கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, நேர்மறையான அணுகுமுறை ஆகியவை தேவை. இது இந்திய அணியிடம் உள்ளது. உலகக் கோப்பையில் விளையாட சிறப்பாக தயாராகி வருகிறோம். இந்த உலகக் கோப்பை இந்திய துணைக் கண்டத்தில் நடைபெறுவது அணிக்கு மேலும் ஒரு சாதகமான அம்சம் என்றார் தோனி.
0 comments :
Post a Comment