background img

புதிய வரவு

டெல்லியில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை


நாடெங்கும் வெங்காய விலை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெங்காயத்தை சமயலில் பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிலோ வெங்காயம் ரூ.60லிருந்து 75 வரை விற்கப்பட்டது.
 
டெல்லியில் கூட்டுறவு கடைகளில் மார்க்கெட் விலையைவிட 20 சதவீதம் குறைத்து கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் பொது மார்க்கெட்டுகளிலும் வெங்காயம் விலை ரூ.40-ல் இருந்து 60 வரை விற்கப்படுகிறது.  
 
கூட்டுறவு கடைகளில் தினந்தோறும் 50 முதல் 100 டன் வெங்காயம் விற்கப்படுகிறது. நடமாடும் வாகனங்களிலும் பொது மக்கள் சிரமமின்றி வெங்காயம் வாங்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய மந்திரி சபை செயலாளர் கே.எம்.சந்திர சேகர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் மார்க்கெட் விலையை விட 20 சதவீதம் தள்ளுபடியில் விற்க முடிவு எடுக்கப்பட்டது.
 
மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பொது மக்களுக்கு நியாய விலையில் விற்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செய்வதாலும் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாலும் வெங்காய விலை குறுகிய காலத்தில் குறைந்துள்ளது.
 
டெல்லியில் கூட்டுறவு கடைகளில் மார்க்கெட் விலையை விட 20 சதவித தள்ளுபடி விலையில் விற்பது போன்று மற்ற மாநிலங்களில் விற்பதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.   வெங்காயத்தை தள்ளுபடி விலையில் விற்பதால் டெல்லி கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட மாதம் ரூ.5 கோடி நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
 
வருகிற 15-ந் தேதிக்கு பிறகு வெங்காய விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts