background img

புதிய வரவு

ஐ.பி.எல்., தொடர்: கங்குலி "அவுட்': இரண்டாவது நாளிலும் விலை போகவில்லை

பெங்களூரு: நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான இரண்டாவது நாள் ஏலத்திலும் கங்குலி தேர்வு செய்யப்படாததால், இத்தொடரில் கங்குலி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் ஏப். 8 ல் துவங்கும் நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்தது. முதல் நாள் ஏலத்தில் இந்தியாவின் காம்பிர் அதிகபட்சமாக ரூ. 11.04 கோடிக்கு ஏலம் போனார். நேற்று ஆஸ்திரேலியாவின் அறிமுகம் இல்லாத இளம் "ஆல் ரவுண்டர்' டேனியல் கிறிஸ்டியனுக்கு(27) பலத்த போட்டி காணப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்காக 3 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் சிறப்பான பீல்டர். இவரை தட்டிச் செல்ல கொச்சி, டெக்கான் அணிகள் மாறி, மாறி ஏலத்தொகையை அதிகரித்துக் கொண்டே சென்றனர். முடிவில் 4.14 கோடி ரூபாய் கொடுத்து இவரை டெக்கான் அணி தட்டிச் சென்றது. முதலில் கிறிஸ்டியனுக்கு அடிப்படை விலையாக 23 லட்சம் மட்டுமே இருந்தது. இறுதியில் இதைவிட 18 மடங்கு அதிகமான தொகை கிடைத்தது.
 இதேபோல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை, டில்லி அணிரூ. 3.40 கோடிக்கு வாங்கியது. மூன்றாவது அதிகபட்சமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல், ரூ 3.17 கோடி கொடுத்து மும்பை அணி பெற்றது. தவிர, உள்ளூர் போட்டிகளில் அசத்தும் வேணு கோபால் ராவ் (டில்லி) 3.17 கோடி ரூபாய் பெற்றது, வியப்பாக இருந்தது.
கங்குலி பரிதாபம்:
நேற்றைய ஏலத்தின் முடிவில், இரண்டாவது சுற்றில் 10 அணிகளின் உரிமையாளர்கள் விருப்பத்தின் பேரில் 28 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதி<லு<ம் கங்குலி இடம்பெறவில்லை. இதையடுத்து, ஐ.பி.எல்., போட்டிகளில் கங்குலியின் பங்கேற்பு முடிவுக்கு வந்துள்ளது.
இதேபோல, ஜெயசூர்யா, கெய்ல், லாரா, பவுச்சர், சுவான் ஆகியோரும் 2வது சுற்று ஏலத்தில் இல்லை.
"லக்கி' கைப்:
 முதல் சுற்று ஏலத்தில் முகமது கைப் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. 2வது சுற்றிலும் இவரை எடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கு பின் புனே, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் கைப் வேண்டும் என கேட்டன. இறுதியில் மல்லையா (பெங்களூரு), ரூ. 59 லட்சம் கொடுத்து கொண்டு சென்றார்.
353ல் 241 அவுட்
இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில் மொத்தம் 353 வீரர்கள் இடம் பெற்றனர். இதில் 241 வீரர்களை யாரும் எடுக்கவில்லை. கடந்த முறை (2008) 50க்கும் அதிகமான வீரர்களை ஏலத்தில் எடுத்த கோல்கட்டா போன்ற அணி, இம்முறை இதுவரை 12 வீரர்களை மட்டும் ஏலத்தில் எடுத்தன. இதேபோல ராஜஸ்தான் (7), டில்லி (9), பஞ்சாப் (11) போன்ற அணிகள், குறைந்த அளவிலான வீரர்களை மட்டும் எடுத்தன.
கைநழுவிய பாலாஜி
சென்னை அணி பெரும்பாலும் தனது பழைய வீரர்களை தக்கவைத்துக்கொண்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் முரளிதரனை கைவிட்டது. இதேபோல, நேற்று பாலாஜியை எடுக்க கோல்கட்டாவுடன் கடுமையாக மோதியது. இறுதியில் ரூ. 2.27 கோடி கொடுக்க கோல்கட்டா முன்வர, வேறு வழியின்றி பாலாஜி, சென்னையை விட்டு பிரிகிறார்.
இரண்டாவது நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட "டாப்-10' வீரர்கள்:
1. கிறிஸ்டியன் (டெக்கான்)    ரூ. 4.08 கோடி
2. உமேஷ் யாதவ் (டில்லி)    ரூ. 3.40 கோடி
3. முனாப் படேல் (மும்பை)    ரூ 3.17 கோடி
4. வேணு கோபால் ராவ் (டில்லி)    ரூ. 3.17 கோடி
5. பாலாஜி (கோல்கட்டா)    ரூ. 2.27 கோடி
6. வினய் குமார் (கொச்சி)    ரூ. 2. 15 கோடி
7. அசோக் டின்டா (டில்லி)    ரூ. 1.70 கோடி
8. ஷான் டெய்ட் (ராஜஸ்தான்)    ரூ. 1.36 கோடி
9. மிச்சல் மார்ஷ் (புனே)    ரூ. 1.32 கோடி
10. கோனி (டெக்கான்)    ரூ. 1.32 கோடி
காரணம் எதுவுமில்லை
நான்காவது தொடருக்கான ஏலத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து வீரர்களை அதிகளவில் யாரும் ஏலத்தில் எடுக்க வில்லை. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயல் இல்லை என, ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமீன் கூறினார். இதுகுறித்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் கூறுகையில்,"" அப்படி என்றால் நாங்கள் பீட்டர்சனை எடுத்திருக்க மாட்டோம். வீரர்களை ஏலத்தில் எடுப்பது அந்தந்த அணிகளின் விருப்பத்தை பொருத்தது, அவ்வளவு தான்,'' என்றார்.
ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட் (ரூ. 4.08), தினேஷ் கார்த்திக் (ரூ. 4.08 கோடி), பியுஸ் சாவ்லா (ரூ. 4.08 கோடி), அபிஷேக் (ரூ. 3.63 கோடி), பிரவீண் குமார் (ரூ. 3.63 கோடி), பிராட் (ரூ. 1.81 கோடி), ஹாரிஸ் (ரூ. 1.48 கோடி), மஸ்கரனாஸ் (ரூ. 45 லட்சம்), ரிம்மிங்டன் (ரூ 9 லட்சம்)
கொச்சி
முரளிதரன் (ரூ. 4.99 கோடி), ஜடேஜா (ரூ. 4.31 கோடி), ஸ்ரீசாந்த் (ரூ. 4.08 கோடி), ஆர்.பி.சிங் (ரூ. 2.27 கோடி), பிரண்டன் மெக்கலம் (ரூ. 2.15 கோடி), வினய் குமார் (ரூ. 2.15 கோடி), ஹாட்ஜ் (ரூ. 1.93 கோடி), லட்சுமண் (ரூ. 1.81 கோடி), பார்த்திவ் (ரூ. 1.32 கோடி), ஸ்டீவன் ஸ்மித் (ரூ. 91 லட்சம்), ஓவைஸ் ஷா (ரூ. 91 லட்சம்), ரமேஷ் பவார் (ரூ. 82 லட்சம்), பெரேரா (ரு. 36 லட்சம்), கிளிங்கர் (ரூ. 34 லட்சம்), ஸ்டீபன் (ரூ. 9 லட்சம்), ஹாஸ்டிங்ஸ் (ரூ. 9 லட்சம்).
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
காம்பிர் (ரூ. 11.04 கோடி), யூசுப் பதான் (ரூ. 9.66 கோடி), காலிஸ் (ரூ. 5.06 கோடி), பாலாஜி (ரூ. 2.27 கோடி), மனோஜ் திவாரி (ரூ. 2.15 கோடி), சாகிப் அல் ஹசன் (ரூ. 1.93 கோடி), பிரெட் லீ (ரூ. 1.81 கோடி), மார்கன் (ரூ. 1.59 கோடி), ஹாடின் (ரூ. 1.48 கோடி), , உனத்கட் (ரூ. 1.13 கோடி)), டஸ்சட்டே (ரூ. 68 லட்சம்), பட்டின்சன் (ரூ. 45 லட்சம்).
மும்பை இந்தியன்ஸ்
சச்சின் (ரூ. 8.16 கோடி), ஹர்பஜன் (ரூ 5.89 கோடி), போலார்டு (ரூ. 4.08 கோடி), சைமண்ட்ஸ் (ரூ. 3.86 கோடி), முனாப் படேல் (ரூ 3.17 கோடி), மலிங்கா (ரூ. 2.26 கோடி), டேவே ஜேக்கப் (ரூ. 86 லட்சம்) கிளின்ட் மெக்கே (ரூ. 50 லட்சம்), பிராங்ளின் (ரூ. 45 லட்சம்), ஹென்டிரிக்ஸ் (ரூ. 9 லட்சம்), பிளிஜார்டு (ரூ. 9 லட்சம்).
புனே வாரியர்ஸ்
மாத்யூஸ் (ரூ. 4.31 கோடி), நெஹ்ரா (ரூ. 3.86 கோடி), ஸ்மித் (ரூ. 2.27 கோடி), முரளி கார்த்திக் (ரூ. 1.81 கோடி), பெர்குசன் (ரூ. 1.36 கோடி), மிச்சல் மார்ஷ் (ரூ. 1.32 கோடி), பெய்னே (ரூ. 1.22 கோடி), பார்னல் (ரூ. 73 லட்சம்), நாதன் மெக்கலம் (ரூ. 45 லட்சம்), ஜேரோம் டெய்லர் (ரூ. 45 லட்சம்), அல்போன்சா தாமஸ் (ரூ. 45 லட்சம்),
ராஜஸ்தான் ராயல்ஸ்
வார்ன் (ரூ. 8.16 கோடி), வாட்சன் (ரூ. 5.89 கோடி), ரோஸ் டெய்லர் (ரூ. 4.53 கோடி), போத்தா (ரூ. 4.31 கோடி), டிராவிட் (ரூ. 2.27 கோடி), ஷான் டெய்ட் (ரூ. 1.36 கோடி), கோலிங்வுட் (ரூ. 1.13 கோடி), பங்கஜ் சிங் (ரூ. 43 லட்சம்), லம்ப் (ரூ. 36 லட்சம்).
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
விராத் கோஹ்லி (ரூ. 8.16 கோடி), டிவிலியர்ஸ் (ரூ. 4.99 கோடி), ஜாகிர் கான் (ரூ. 4.08 கோடி), புஜாரா (ரூ. 3.17 கோடி), நான்ஸ் (ரூ. 2.95 கோடி), தில்ஷன் (ரூ. 2.95 கோடி), வெட்டோரி (ரூ. 2.49 கோடி), அபிமன்யு மிதுன் (ரூ. 1.18 கோடி), லாங்கிவெல்ட் (ரூ. 64 லட்சம்), முகமது கைப் (ரூ. 59 லட்சம்), பாமர்ஸ்பச் (ரூ. 23 லட்சம்), வான் டர் வாத் (ரூ. 23 லட்சம்), ரோசாவ் (9 லட்சம்), பிரதீப் (9 லட்சம்), வான்டிர் (ரூ 9 லட்சம்).
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி (ரூ. 8.16 கோடி), ரெய்னா (ரூ 5.89 கோடி), முரளி விஜய் (ரூ. 4.08 கோடி), ஆல்பி மார்கல் (ரூ. 2.26 கோடி), அஷ்வின் (ரூ. 3.86 கோடி ), பத்ரிநாத் (ரூ. 3.63 கோடி), போலிஞ்சர் (ரூ. 3.17 கோடி), மைக்கேல் ஹசி (ரூ. 1.93 கோடி), சுதீப் தியாகி (ரூ. 1.01 கோடி), பிராவோ (ரூ. 91 லட்சம்), ஸ்டைரிஸ் (ரூ 91 லட்சம்), ஜோகிந்தர் சர்மா (ரூ. 68 லட்சம்), டு பிளசிஸ் (ரூ. 54 லட்சம்), குலசேகரா (ரூ. 45 லட்சம்), ஹில்பெனாஸ் (ரூ. 45 லட்சம்), சகா (ரூ. 45 லட்சம்), ரந்திவ் (ரூ. 36 லட்சம்), ஜார்ஜ் பெய்லி (ரூ. 23 லட்சம்).
டெக்கான் சார்ஜர்ஸ்
ஒயிட் (ரூ. 4.99 கோடி), டேனியல் கிறிஸ்டியன் (ரூ. 4.14 கோடி), சங்ககரா (ரூ. 3.17 கோடி), பீட்டர்சன் (ரூ. 2.95 கோடி), பிரக்யான் ஓஜா (ரூ. 2.27 கோடி), இஷாந்த் சர்மா (ரூ. 2.04 கோடி), அமித் மிஸ்ரா (ரூ. 1.36 கோடி), டுமினி (ரூ. 1.36 கோடி), சிகர் தவான் (ரூ. 1.36 கோடி), கோனி (ரூ. 1.32 கோடி), கிறிஸ் லைன் (ரூ. 91 லட்சம்).
டில்லி டேர் டெவில்ஸ்
சேவக் (ரூ. 8.16 கோடி), டேவிட் வார்னர் (ரூ. 3.40 கோடி), உமேஷ் யாதவ் (ரூ. 3.40 கோடி), வேணு கோபால் ராவ் (ரூ. 3.17 கோடி), மார்னே மார்கல் (ரூ. 2.15 கோடி), அசோக் டின்டா (ரூ. 1.70 கோடி), ஜேம்ஸ் ஹோப்ஸ் (ரூ. 1.59 கோடி), ஆரோன் பின்ச் (ரூ. 1.36 கோடி), நமன் ஓஜா (ரூ. 1.23 கோடி), அகார்கர் (ரூ. 95 லட்சம்), மாத்யூ வாடே (ரூ. 45 லட்சம்), இங்ராம் (ரூ. 45 லட்சம்), மெக் டொனால்டு (ரூ. 36 லட்சம்), வான் டர் மெர்வி (ரூ. 23 லட்சம்), ராபர்ட் பிரிங்க் (ரூ 9 லட்சம்).

அன்று சைக்கிளில்...
இன்று கோடிகளில்....
 ஐ.பி.எல்., ஏலத்தில் இம்முறை யூசுப் (ரூ. 9.7 கோடி, கோல்கட்டா அணி) இர்பான் பதான் (ரூ. 8.7 கோடி, டில்லி அணி) சகோதரர்களுக்கு தான் "ஜாக்பாட்' அடித்தது. இவர்கள் மட்டும் ரூ. 18.40 கோடி ரூபாயை தட்டிச் சென்றனர்.
 குஜராத்தில் உள்ள பரோடாவில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் தான் பதான் சகோதரர்கள் பிறந்தனர். இவர்களது தந்தை பரோடாவில் உள்ள ஜும்மா மசூதிக்கு வெளியே, ஒரு சிறிய நறுமணப் பொருட்கள் கடை நடத்தி வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிறிய வீட்டில் வசித்தனர். அப்போது கிரிக்கெட் பயிற்சிக்காக இருவரும், மைதானத்துக்கு சைக்கிளில் தான் சென்றனர். இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. தங்களது திறமையான ஆட்டத்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். தற்போது ரூ. 2.5 கோடி மதிப்பிலான மாளிகையில் குடியேறியுள்ளனர்.
இது குறித்து இர்பான் கூறுகையில்,""சிறிய வீட்டில் இருந்து துவங்கிய எங்களது கனவு பயணம், சிறப்பாக செல்கிறது. எங்களது வாழ்க்கையில் எல்லாமே மாறிவிட்டது. இதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஐ.பி.எல்., ஏலம் துவங்குவதற்கு முன் "யாருக்கு அதிக தொகை கிடைத்தாலும் கவலை இல்லை; நமது குடும்பத்துக்கு தானே வருமானம் வரப் போகிறது' என யூசுப் கூறியதை, நினைத்து பெருமைப்படுகிறேன்,''என்றார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts