ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கையை குறைக்கூறிய மத்திய அமைச்சர் கபிசிபலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில் சிபல், இந்த தணிக்கை துறை அறிக்கை தவறானது என்று கூறினார்.
இன்னிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கபில் சிபல் கருத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தன்னுடைய பொறுப்பை துளி கூட உணராமல் செயல்படும் அமைச்சரின் செயல்பாடு மிகவும் துரதிஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், தனிப்பட்ட எவர் ஒருவருடைய தலையீட்டுக்கும் அடிபணியாது சி.பி.ஐ. தனது புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
0 comments :
Post a Comment